Tamil News

தனி ஒருவன் 2 – ஜெயம் ரவிக்கு வில்லனாகும் பாலிவுட் சூப்பர் ஹீரோ.. யாருனு பாருங்க

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சைரன் படம் வெளியானது.

அடுத்ததாக ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியான சூழலில் இந்த ஆண்டு இறுதியிலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. விரைவில் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தனி ஒருவன் 2 படத்தில் அரவிந்த் சாமி நடிக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதற்கு பதிலாக இந்த மாஸ் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதியில் தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனி ஒருவன் படத்தில் மிரட்டலாக அமைந்த அரவிந்த் சாமியின் கேரக்டரை இவர் எப்படி நடிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கான விடையை படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான விடையை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

 

Exit mobile version