Tamil News

தங்கலான் ட்ரைலர் வெளியாகும் திகதி – மக்களே ரெடியா?

நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான்.

படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.

கோலார் தங்கவயலை மைய்யப்படுத்திய இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் தங்கலான் படத்தின் ட்ரைலர் நாளை அதாவது ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

மேலும் நாளை எந்த நேரத்தில் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படுகின்றது என்பது குறித்து படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடவில்லை.

Exit mobile version