Tamil News

தங்கலான் ரிலீஸ் திகதி அறிவிப்பு? எப்ப தெரியுமா?

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.

இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அவர் இயக்கியதிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படமாக அது அமைந்தது.

இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்க கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தங்கலான் அமையும் என்பதை கடந்த வருடம் வெளியான அதன் மேக்கிங் வீடியோவும், ட்ரெய்லரும் உணர்த்தின. அதனைப் பார்த்த ரசிகர்கள் விக்ரம் சும்மாவே அசுரத்தனமாக உழைப்பார்.

இப்போது பா.இரஞ்சித்தோடு வேறு இணைந்திருக்கிறார். சொல்லவா வேண்டும். படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகி விக்ரமுக்கு இருக்கும் தோல்வி முகத்தை மாற்றும் என கமெண்ட்ஸ் செய்தனர்.

கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல்தான் கதை என கூறப்படுகிறது. கேஜிஎஃப்பில் அவர்கள் இருந்தபோது எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை இரஞ்சித் ரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி இந்தப் படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அதன்படி ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதமே படம் ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version