Tamil News

தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ…. தெறிக்கவிடும் புதிய செய்தி…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் திகதி வெளியாகிறது.

லியோ ரிலீஸுக்கு முன்பே தளபதி 68 படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிஸியாகிவிட்டார் விஜய். தளபதி 68 படத்துக்காக விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர்.

இன்னொரு பக்கம் யுவன் சங்கர் ராஜா தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங் வேலைகளில் வெறித்தனம் காட்டி வருகிறாராம்.

விஜய், வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்காவில் சம்பவம் செய்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ‘புதிய கீதை’ படத்துக்குப் பின்னர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள யுவன், தளபதி 68ல் மாஸ் காட்ட காத்திருக்கிறாராம்.

இதனால், லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங் அசுர வேகத்தில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி, தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள், தரலோக்கலில் மரண குத்து பாடலாக இருக்கும் என யுவன் தெரிவித்துள்ளார்.

SRM கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர், தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து செம்ம அப்டேட் கொடுத்துள்ளார்.

விஜய் – யுவன் காம்போ நீண்ட வருடங்களுக்குப் பின்னர் இணைந்துள்ளதால், நிச்சயமாக தளபதி 68 ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்போதே தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட்டை யுவன் கொடுத்துள்ளது, எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. தளபதி 68 படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் பூஜையுடன் தொடங்கும் எனவும், அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், சினேகா, ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version