Site icon Tamil News

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் திரு.தவிசின் பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

76வது இலங்கை சுதந்திர தின விழாவில் விருந்தினராக இலங்கை வருகிறார்.

அந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை நடத்துவதுடன் இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

Exit mobile version