Site icon Tamil News

டெக்சாஸின் புதிய குடியேற்ற சட்டம் ; எதிர்ப்பு தெரிவித்துள்ள மெக்சிகோ

அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது மெக்சிகோ . தென்அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் மெக்சிகோ எல்லை வழியாகத்தான் ஊடுருவி வருகிறார்கள்.

இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால்தான் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் டெக்சாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த சட்டம் மூலம் மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். இந்த சட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, டெக்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயரும் நபர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக வழக்கு தொடர முடியும். ஆனால், டெக்காஸ் மாநிலத்தின் இந்த புதிய குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மெக்சிகோ தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் “எந்தவொரு சூழ்நிலையிலும் டெக்சாஸ் மாநிலத்தால் திருப்பி அனுப்படுவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்” எனத் தெரிவத்துள்ளது.

Exit mobile version