Site icon Tamil News

தொலைத்தொடர்பு விற்பனை! தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல்

“தேசிய பாதுகாப்பில் சிறிலங்கா டெலிகொம் தனியார் மயமாவதால் ஏற்படும் பாதிப்புகள்” என்ற அறிக்கையின்படி, சிறிலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்து ஏற்படலாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் கலாநிதி சரத் வீரசேகர இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (9) சமர்ப்பித்துள்ளார்.

தனியார் நிறுவனங்கள் முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளை வைத்திருந்தால், தேசிய பாதுகாப்பு மற்றும் மாநில பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் எனவும் அதனால், கடுமையான விளைவுகள் ஏற்படலாம் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், தேசிய பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வது அவசியம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் அவ்வறிக்கையில்,

“சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தொடர்பிலான பரிந்துரைகளை குழு முன்வைக்கவில்லை.

மேலும், தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது அவர்களுக்கு உதவியவர்களிடமிருந்தோ அல்லது தடுப்புப்பட்டியலில் உள்ள அமைப்புகளிடமிருந்தோ தேசிய சொத்துக்களில் பங்கு மற்றும் கட்டுப்பாட்டை பயங்கரவாதிகள் வாங்க அனுமதிக்கக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்பட்டால், அதன் பெரும்பான்மையான பங்குகளின் உரிமையும் கட்டுப்பாடும் தனியார் முதலீட்டாளர்களுக்குச் சொந்தமாகிவிடும் என்றும், அவர்கள் நாட்டின் பிழைப்பைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள், லாபத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்றும் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version