Site icon Tamil News

மாணவர்களுக்கு ஆபாசமான படங்களைக் காட்டிய ஆசிரியர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசமான படங்களைக் காட்டிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் வனாதவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தனது கையடக்கத் தொலைபேசியில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசமான படங்களை காண்பிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வனாத்தவில்லுவ பிரதேச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மதுரங்குளிய – தொடுவாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர். சந்தேகநபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Exit mobile version