Site icon Tamil News

நீண்டகாலத்தின் பின் இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா!

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளது. இதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த அறிவிப்பின் போது, ​​இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனகநாதன், தான்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை இனி இல்லை என வலியுறுத்தினார்.

இலங்கை வணிகர்கள் மற்றும் பயணிகள் இப்போது தான்சானியாவிற்கு ஆன்லைன் மூலம் நிலையான விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சுமார் 450 இலங்கை வணிகர்கள், மாணிக்கக்கல் மற்றும் கல் வர்த்தகர்கள் உட்பட ஏனைய பயணிகளுடன், இப்போது இணையத்தில் நிலையான விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தான்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இலங்கையை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version