Site icon Tamil News

தமிழர் பகுதியில் வசிக்கும் இலங்கையின் உயரமான நபர் – சிங்கள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் குணசிங்கம் கசேந்திரன் 07 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர்.

இலங்கையின் மிக உயரமான நபர் தாம் என நம்புவதாக அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அவர், தனது உயரம் காரணமாக தாம் எதிர்கொண்ட சூழ்நிலைகள் மற்றும் சமூகத்தில் தனக்கு கிடைத்த எதிர்வினைகள் குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.

“நான் உயரமாக இருப்பதால் இங்குள்ள செருப்புகளை பயன்படுத்த முடியாது. அவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

முச்சக்கர வண்டி சாரதியாக இருப்பதால்,சிரமமாக உள்ளது என்கிறார். அதற்குக் காரணம் அவருடைய உயரம். இந்த உயரத்தினால் பேருந்துகளில் பயணிக்கும் போது பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் கூறுகிறார்.

பேருந்தில் நிற்க முடியாது, ஆசனத்தில் உட்காருவதும் சிரமமாக இருப்பதாக குணசிங்கம் கசேந்திரன் கூறுகிறார்.

குணசிங்கம் கசேந்திரன் தாம் வாழும் பிரதேசங்களில் தனக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் சிங்களப் பிரதேசங்களில் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். சிலர் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.

Exit mobile version