Site icon Tamil News

தையிட்டி – மண்ணை பாதுகாக்க அணிதிரள அழைப்பு விடுத்துள்ள சட்டத்தரணி கே. சுகாஷ்

யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஷ் இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

பலாலி தையிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தர இருப்பதாக நம்பத் தகுந்த தகவல் எங்ளுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக இருந்தால் நிரந்தரமாகவே அந்தக் காணிகள் சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விடும்.

ஆகவே சட்டவிரோத விகாரைக் கட்டுமாணத்தை எதிர்த்தும் நில அளவைப் பணிகளை எதிர்த்தும் எதர்திர்வரும் செவ்வாய்க் கிழமை தமிழ் மக்கள் அனைவரும் அங்கே திரண்டு தமது எதிர்ப்பை பலமாக காட்டி அளவீட்டு பணிகளை தடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் எழுந்திருக்கிறது.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் எமது கோரிக்கையை ஏற்று செவ்வாய்க்கிழமை காலையில் அந்த இடத்திற்கு அணிதிரள வேண்டும். எமது மண்ணை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென அன்புரிமையோடு கேட்டு நிற்கிறோம் என்றார்.

Exit mobile version