Site icon Tamil News

சுரேஷ் சாலே ராஜபக்ஷக்களின் குடும்ப பாதுகாவலன் – சரத் பொன்சேக்கா!

புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே ராஜபக்ஷக்களின் குடும்ப பாதுகாவலன் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07.09) இடம்பெற்ற கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் -04 வெளியிட்டுள்ள காணொலி குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பது பயனற்றது.

ஆகவே சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அந்த காணொலியில் சுரேஷ் சாலே பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2010 ஆண்டு பொனிபஸ் பெரேரா என்பவருடன் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வு பிரிவில் அதிகாரமிக்கவராக்கப்பட்டார்.

இவர் ராஜபக்ஷக்களின் பாதுகாவலன் ஆகும். ஆகவே இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version