Site icon Tamil News

இலங்கையில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : வைத்தியர்கள் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக   தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரம் வரையிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வைத்தியர் மேல் மாகாணத்தில் 14 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் கூறினார்.

இது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 49 சதவீதமாகும். இதில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது தவிர திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்  என்றார். எவரேனும் ஒருவர் காய்ச்சல் பீடிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்

Exit mobile version