Site icon Tamil News

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையிடம் இருந்த கையிருப்பின் பெறுமதி 2 ஆயிரத்து 217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கையிருப்பில் இருந்த 2 ஆயிரத்து 121 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 4.5 வீத அதிகரிப்பாகும்.

உத்தியோபூர்வ கையிருப்பு சொத்துகளில் உள்ளடக்கப்படும் அந்நிய செலாவணி கையிருப்பதாக 2 ஆயிரத்து 65 மில்லியன் டொலர்களில் இருந்து 2 ஆயிரத்து 183 மில்லியன் டொலர்களாக 5.7 என்ற வீதத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கி தங்க கையிருப்பானது 29 மில்லியன் டொலர்களில் இருந்து 28 மில்லியன் டொலர்கள் என்ற அளவில் 5.3 வீதமாக குறைந்தது.

அந்நிய செலாவணி கையிருப்பில் சீனாவிடம் இருந்த பெறப்பட்ட 1.4 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி பரிமாற்றல் வசதியும் அடங்குவதாகவும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இது சில நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்தும் அடிப்படையில் சீனாவினால் வழங்கப்பட்டுள்ள கடனுதவியாகும்.

Exit mobile version