Site icon Tamil News

சூரியனில் திடீர் வெடிப்பு – மின்காந்த புயல் பூமியை தாக்கும் அபாயம்

சூரியனின் மேற்புறத்தில் வெடிப்பு ஏற்படும் பொழுது அதிலிருந்து பிளாஸ்மா எனப்படும் சூரிய புயல் வெளிவரும்.

இந்த சூரிய புயலானது பூமியின் காந்தமண்டலத்தை தாக்கி மின்காந்த புயலை உருவாக்கும். இதுவே புவிகாந்த புயல் எனப்படுகிறது. இபப்டியான மின்காந்த புயலால் மின்சாதன கருவிகள் பழுதடையலாம்.

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் நகரும் காலத்தை உத்தராயணம் தெட்சணானயம் என்று பிரித்துள்ளனர்.

அதன்படி பூமியானது தற்பொழுது உத்தராயணகாலத்தில் இருக்கிறது. அதாவது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் காலம் இதுவாகும். இந்த காலத்தில் சூரியன் பூமத்திய ரேகைக்கு மேலே நேராக இருக்கும்.

இதனால் இரவு பகலானது சரிசமமாக இருக்கும். இதை ஈக்வினாக்ஸ் (Equinox) என்பார்கள். இச்சமயம் புவிகாந்த அதிர்வெண்ணானது அதிகரித்து இருக்கும்.

அடுத்ததாக சூரியனை எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் கரும்புள்ளிகளுக்கு விஞ்ஞானிகள் AR3833, AR3831, AR3825, AR3828, AR3827, AR3834, AR3835 AR3836 என்று பெயரிட்டு அதனை ஆராய்ந்து வருகிறார்கள்.

அவர்கள் ஆய்வின்படி AR3835 புள்ளியானது வெடிக்கும் நிலையில் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அது திடீரென வெடித்து சூரிய புயலை வெளியிட்டு இருக்கிறது.

இந்த சூரிய புயலானது மணிக்கு 10,46,073 கி.மீ வேகத்தில் இன்று (செப் 25) பூமியைத்தாக்க வந்துக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த சூரிய புயலானது பூமியின் காந்தமண்டலத்தை தாக்கும்பொழுது, புவிகாந்த புயலானது உருவாகும். இதனால் வானத்தில் அரோராஸ் எனப்படும் ஒளியின் வண்ண காட்சிகளை காணமுடியும். ஈக்வினாக்ஸ் சமயத்தில் பூமியானது செங்குத்தாக இருப்பதால், சூரியபுயலின் தாக்கம் பூமியின் மீது g-1, g2 அளவிற்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த சூரியகாந்த புயல் அட்சரேகைகளில் உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும், தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் பாதிப்பையும் ஏற்படுத்த கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது இன்று பூமியை தாக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version