Site icon Tamil News

உலகில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியானது

அதிக குற்றங்கள் மற்றும் பாதுகாப்பின்மை உட்பட உலகில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நகரங்களில் ஆஸ்திரேலிய நகரமும் இணைந்துள்ளது.

அதன்படி, குற்றச்செயல்களின் மையமாக கருதப்படும் மெக்சிகோவில் உள்ள Tijuana நகரை பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் Northern Territory இல் உள்ள Alice Springs 18வது இடத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alice Springs இரண்டு ஆண்டுகளில் முதல் 20 குற்றக் குறியீட்டில் இடம்பிடித்த முதல் ஆஸ்திரேலிய நகரமாகும்.

அதன் உயர் தரவரிசை இளைஞர் கும்பல் வன்முறை காரணமாக உள்ளது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகரம் முதல் 450 குற்ற நகரங்களில் கூட இடம் பெறவில்லை.

2024 ஆம் ஆண்டிற்கான இந்த தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் Pietermaritzburg மற்றும் பிரிட்டோரியா (Pretoria) ஆகிய இரண்டு நகரங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களுக்கு வந்துள்ளன.

வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் (Caracas) மற்றும் பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby)  ஆகியவை மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றுள்ளன.

இதில் சிறப்பு என்னவென்றால் ஜோகன்னஸ்பர்க், டர்பன், போர்ட் எலிசபெத் ஆகிய மூன்று தென்னாப்பிரிக்க நகரங்கள் 5, 6 மற்றும் 7வது இடங்களில் இடம் பெற்றுள்ளன.

மேலும் தொடர்புடைய தரவரிசையில், ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரம் 18வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் 17வது இடத்திலும் உள்ளது.

Exit mobile version