Tamil News

பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் மாணவர்கள்! திருகோணமலையில் நடந்த நீச்சல் போட்டி

திருகோணமலையில் இன்று ( 01) நீச்சல் போட்டியொன்று நடாத்தப்பட்டது.

TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் நிலையில் இப்போட்டி நடாத்தப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற் பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக சல்லி முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்திச் சென்றுள்ளனர்.

பதினாறு வயதுக்கு கீழ் பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்கு பற்றினர்.

அண்ணளவாக 13 கிலோமீட்டர் தூரத்தை ஐந்து மணித்தியாலங்களில் நீந்தியுள்ளனர்.

காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் 06 சிறார்கள் 13 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

சிமர் என்ற சிறுவன் முதலாம் இடத்தினை பெற்று கொண்டார்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் எமது ஐ.எப். ஊடகவலையமைப்பிற்கு தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

 

Exit mobile version