Site icon Tamil News

ஜப்பானில் நடந்த வினோதம் – 6 மாதங்களாக தவறான அடையாளத்தில் வாழ்ந்த நபர்

ஜப்பானில் வெளிநாட்டவர் ஒருவர் தனக்கே தெரியாமல் 6 மாதங்களாக தவறான அடையாளத்தில் வாழ்ந்து வந்த விடயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவருடைய விபரங்கள் கொண்ட மற்றொருவரின் அடையாளத்துடன் அதிகாரிகள் குழப்பமடைந்ததால் அந்தச் சிக்கல் ஏற்பப்டுள்ளது.

20 வயதுக்கு மேற்பட்ட அந்த நபரை் தங்கியிருக்கும் முகவரியைப் பதிவுசெய்ய கடந்த ஆண்டு நவம்பரில் Tokushima நகர மன்றத்துக்குச் சென்றார்.

ஒரே பெயர், ஒரே குடியுரிமை, ஒரே பிறந்தநாளைக் கொண்டிருந்த மற்றொருவரின் அடையாள அட்டை அவருக்குத் தவறாக வழங்கப்பட்டது.

அவர் நகர மன்றத்துக்குச் சென்றபோது அவரின் விவரங்களைக் கண்ட அதிகாரிகள், அதே விவரங்களைக் கொண்ட மற்றொருவர்தான் முகவரியை மாற்ற வந்திருக்கிறார் என்று தவறாக நினைத்தனர். அந்த நபருக்கு ஜப்பானிய மொழி பெரிதாக பேசத் தெரியாதென தெரியவந்துள்ளது.

6 மாதங்களுக்குப் பிறகு நடந்த தவற்றை அந்நாட்டின் தேசிய ஓய்வூதியச் சேவை கண்டுபிடித்தது.

மற்ற நபர் ஜப்பானைவிட்டு வெளியேறிவிட்டதால் தவறை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சரியாகவே செய்தாலும் தவறாகப் போகும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

Exit mobile version