Site icon Tamil News

பாக். நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தை கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி கலைத்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தற்போது அன்வர் உல் ஹக் காகர் காபந்து பிரதமர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்ட அதிகரிகள் நியமனத்தை லாகூர் ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருந்தது.

இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், லாகூர் கோர்ட்டின் உத்தரவை நேற்று இரவு ரத்து செய்தது. இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களில் பாகிஸ்தானில் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில்கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டு 336 இடங்களாக உள்ளது. இதில், 366 இடங்கள் பொது தொகுதிகள் ஆகும். 60 தொகுதிகள் பெண்களுக்காக ரிசர்வ் தொகுதியாகும். முஸ்லீம் இல்லாத வேட்பாளருக்காக 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version