Tamil News

‘GOAT’ ட்ரைலர் குறித்து அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த சூப்பர் டூப்பர் அப்டேட்…

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் டிரைலர் குறித்து, இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள பதிவு தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தளபதி விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள, கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் பரபரப்பாக நடந்து. அந்த வகையில் இதுவரை யுவன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடல் அதிக விமர்சனங்களுக்கு ஆளானது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை ஒரு சயின்ஸ் பிக்சன், ஆக்சன் திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் போட்டு உள்ள பதிவில்…

“உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம். எனவே தயவுசெய்து அமைதியாக இருங்கள் மற்றும் எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். நாளை உங்களுக்கு சரியான தகவலை தருகிறேன் என கூறியுள்ளார். எனவே கூடிய விரைவில் இப்படத்தின் ட்ரைலர் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

 

Exit mobile version