Site icon Tamil News

ஒலிம்பிக் போட்டியில் ஆரம்பம் – இலங்கை சார்பில் ஆறு வீர வீராங்கனைகள் பங்கேற்பு

எதிர்வரும் 26ஆம் திகதி பிரான்ஸின் பாரிஸில் ஆரம்பமாகவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் 06 வீராங்கனைகள் களமிறங்கவுள்ளதாக பிபிசி சிங்களம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஷெமல் பெர்னாண்டோ பிபிசி சிங்களத்திடம் நேற்று (16) தடகளப் பிரிவில் மூன்று வீராங்கனைகளும், நீச்சல் பிரிவில் இரண்டு வீராங்கனைகளும், பூப்பந்துப் பிரிவில் ஒரு வீரரும் இந்த ஆண்டு ஒலிம்பிக்கைப் பிரதிநிதித்துவப்படுத்த இணைவார்கள் என்று தெரிவித்தார்.

அதன்படி, இவ்வருட ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் இலங்கை கொடியை பூப்பந்து வீரர் வீரேன் நெட்டசிங்க மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை நதீஷா ஆகியோர் ஏந்திச் செல்வர் என விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தருஷி தில்சரா கருணாரத்ன (800 மீ.), நடிஷா தில்ஹானி சியாதரகே (ஈட்டி எறிதல் – பெண்கள்), அருணா தர்ஷன் (400 மீ), கைல் அபேசிங்க மற்றும் கங்கா சேனவிரத்ன (நீச்சல்) மற்றும் வீரேன் நெட்டாசிங் ஆகியோர் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர்.

2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து 20 வீரர், வீராங்கனைகள் பங்குபற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, ஜூலை 8ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்.

Exit mobile version