Site icon Tamil News

பாரிஸ் நகரில் கத்திக்குத்து; பாகுகாப்ப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் படுகாயம்

பிரெஞ்சுத் தலைநகர் பிரான்சில் உள்ள பிரதான ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரல்ட் டார்மனின் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.காயமடைந்த ராணுவ வீரரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று டார்மனின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக பிரெஞ்சுக் காவல்துறை கூறியது.

பாரிசில் இன்னும் சில நாள்களில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பிறந்த பிரான்ஸ் நாட்டவர் என்றும் அவருக்கு 40 வயது என்றும் காவல்துறை தெரிவித்தது.

தாம் பிறந்த நாட்டில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் மக்களைக் கொன்றதால் ராணுவ வீரரைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

Exit mobile version