Site icon Tamil News

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த முடியாமல் திணறல்

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுகின்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஆனால் இதுவரையில் நாடு கடத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் நாடு கடத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் அரசாங்கமானது நிராகரிக்கப்பட்ட அகதிகளை ஜெர்மன் நாட்டை விட்டு நாடு கடத்துவதற்காகன நடவடிக்கைகளை துரிதப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் சமஷ்டி பொலிஸார் வெளியிட்டுள்ள கருத்தில் கடந்த ஆண்டுகளில் 50 வீதமான நாடு கடத்தல் முயற்சி நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றது.

குறிப்பாக ஜெர்மனியின் விமான நிலையங்களில் இருந்து இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக மாநில பொலிஸார் சமஷ்ட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்த நிலையிலும், 50 வீதமான நாடுகடத்தப்பட தகுதியானவர்கள் விமான நிலையத்துக்கு வர வில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூடுதலாக மாநில பொலிஸார் இவர்களை தேடி செல்லும் பொழுது இவர்கள் வதிவிட இடங்களில் இல்லாமல் வேறு எங்கேயோ மறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version