Site icon Tamil News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணங்களில் தாமதம் – வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட நிறுவனம்

பாரீஸ் நகரில் டயர் வெடித்ததாலும், மற்ற விமானங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டதாலும் கிறிஸ்துமஸ் காலத்தில் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வாடிக்கையாளர்களிடம் விமான சேவை மன்னிப்புக் கோரியுள்ளது.

கடந்த சில நாட்களாக விமான சேவையினால் ஏற்பட்ட தொடர் இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட  பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பான காலகட்டத்தில் 2 ஏர்பஸ் ஏ330 விமானங்கள்  தரையிறங்குவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அது பாரிய சவாலாக இருந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள விநியோக பற்றாக்குறை காரணமாக விமான மாற்றீடுகளை மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பாரிஸில் இருந்து திரும்பவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் டயர் வெடித்ததனால் ஏற்பட்ட தாமதம் தொடர்பிலும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 2 உதிரி இயந்திரங்கள் மற்றும் புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்திற்கு தடைகள், தவிர்க்க முடியாத விமான இரத்து மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்தது.

பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்வதுடன் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்த அயராது உழைத்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் தங்கள் சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானம் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இரண்டு A320 கள் அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட எஞ்சின்களுடன் சேவைக்குத் திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version