Site icon Tamil News

இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் குழு நிவாரணம் வழங்கலாம் : ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் குழு இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்கலாம் என ஜப்பானின் “ஜிஜி” செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மேலும் கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து தலைமை வகிக்கின்றன.

இலங்கையின் மிகப் பெரிய வெளிநாட்டுக் கடனாளியான சீனாவும் இந்தக் குழுவில் இணைவதற்கு வழி வகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

$4.2 பில்லியன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனாவின் எக்சிம் வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கடன் வழங்கும் நாடுகளின் குழுவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இந்த சமீபத்திய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை இரண்டாவது கடன் தவணையை (330 மில்லியன்) பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.

Exit mobile version