Tamil News

உலகிலேயே மிக குறைந்த சம்பளம் பெறும் இலங்கையர்கள்

உலகிலேயே மிக குறைந்த சம்பளம் பெறும் நாடாக இலங்கை உள்ளதென புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக 105 நாடுகளை மெய்யப்படுத்தி சிஈஓ வோர்ல்டு இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன் பிரகாரம் உலக நாடுகளில் சராசரியாக அதிக தொகையான மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்ளும் நாடக ஸ்விஸ்ர்லாந்து பெயரிட்டுள்ளது.

அதன் தொகை 6142.1 அமெரிக்க டொலர்கள் ஆகும் . சராசரியாக இலங்கை ரூபாயில் 19 இலட்சம் ஆகும் .

இந்த பட்டியலில் இறுதியாக 105வது இடத்தில் உலகிலேயே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியர்கள் உள்ள நாடாக இந்த இணையதளம் இலங்கையை பெயரிட்டுள்ளது .

இதன் பிரகாரம் இலங்கை ஒருவரின் சராசரி மாதாந்த சம்பளமாக 143.62 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கிறது . இலங்கை பணத்திற்கமைய, சுமார் 45,000 ரூபாயாகும்.

Exit mobile version