Site icon Tamil News

உக்ரைனில் போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ராணுவ வீரர்கள்

ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட 5 இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவங்களுடன் இணைந்து போரிடுவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, உக்ரேனுடன் அங்கீகாரம் பெற்ற துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஐந்து இலங்கையர்கள் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் உக்ரேனியப் படைகளுடன் போரிட்ட மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்தனர்

முன்னதாக, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் இருந்து அமைச்சர்கள் குழு மொஸ்கோவிற்கு விஜயம் செய்தது.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் கூற்றுப்படி, இலங்கையர்கள், பெரும்பாலும் ஓய்வுபெற்ற இராணுவத்தினர், ரஷ்ய குடியுரிமை உள்ளிட்ட நல்ல சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து ரஷ்யாவிற்கு பயணமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர், இதனால் அவர்களை விடுவிக்க கடினமாக உள்ளது. சிலர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

Exit mobile version