Site icon Tamil News

செங்கடலுக்கு அனுப்பப்படும் இலங்கையின் கப்பல் : ஆதரவும், எதிர்ப்பும்!

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இணைக்கும் முக்கிய கடல் மார்க்கமான, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி பகுதியில் ஹுதி படைகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் நிலவுகிறது.

கடந்த 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த பின்னர் குறித்த பகுதியினூடாக பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஹுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனைத் தொடங்கின, மேலும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கையும் தனது கப்பலை குறித்த பகுதிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய, கப்பல்களை அனுப்புவதற்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அவர்கள் ரோந்து செல்லும் பகுதி இறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல்களை அனுப்பும் முடிவு எதிர்கட்சியனிடையே விமரசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையர்கள் உள்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை அனுபவிக்கும் போது, அரசாங்கம் 250 மில்லியன் (USD 777,000) செலவழித்து கப்பல்களை அனுப்ப வேண்டுமா என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமிதா தென்னகோன் இந்த நடவடிக்கையை ஆதரித்தார், அரசாங்கம் தனது “உலகளாவிய பொறுப்புகளை” நிறைவேற்ற விரும்புகிறது என்றும் “இலங்கை எந்த வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரானது” என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version