Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : கள்ள வாக்களிப்பிற்கு சிறை தண்டனையுடன் 07 ஆண்டுகள் வாக்களிக்க தடை!

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடுபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறைத் தண்டனையும் 02 லட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடுமென பல கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் கள்ள வாக்களிக்கும் நபர்களுக்கு மேல் நீதிமன்றத்தினூடாக கடுமையான தண்டனைகளை வழங்க முடியுமென ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபா தண்டப்பணத்தை விதிக்க முடியும். அல்லது 12 மாதங்கள் சிறைத் தண்டனையை விதிக்க முடியும். அல்லது இரண்டு லட்சம் அபராதத்துடன், தண்டனையையும் வழங்க முடியும்.

அத்துடன்  அவர்களுக்கு 07 ஆண்டுகள் வாக்களிக்கவும் வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடைவிதிக்கப்படும் என சிந்தக குலரத்ன மேலும் தெரிவித்தார்.

Exit mobile version