Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – ரணிலை கடுமையாக விமர்சித்த அனுரகுமார

புதிய பொருளாதாரம் ஆக்கத்திறனின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் உருவாக்கப்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை தூற்றிய மஹிந்தாநந்த இன்று அவரை வெல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான மோசமான அரசியல் கலாசாரம் எமது நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரம் ஒன்றை முன்னெடுப்பதாக ரணில் கூறுகிறார். அவரது திட்டங்கள் பயனற்றவையாகும்.

விமான நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறுவதற்கு இரண்டு மணிநேரம் ஆகிறது.

இதனை நிவர்த்திக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக ஜப்பான் நிறுவனமொன்று முன்வந்தது. நிமல் சிறிபால டி சில்வா அந்த நிறுவனத்திடம் பணம் கோரியதால், இதனையடுத்து அவரை கோட்டாபய பதவி நீக்கினார்.

ரணில் ஜனாதிபதியானதன் பின்னர் மீண்டும் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விமான போக்குவரத்து அமைச்சை கையளித்தவுடன் குறித்த ஜப்பான் நிறுவனம் அந்த வேலைத்திட்டதிலிருந்து விலகியது.

இன்று அந்த அபிவிருத்தி திட்டம் பாதியில் நிற்கிறது. ஆக்கத்திறனின் அடிப்படையிலேயே உலகில் புதிய பொருளாதாரங்கள் கட்டியெழுப்படுகின்றன.

எனவே, ஆக்கத்திறனின் மூலம் மாத்திரமே புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version