Site icon Tamil News

காலநிலை செழிப்பு திட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி அழைப்பு!

காலநிலை செழிப்புத் திட்டங்கள் என்பது காலநிலை பாதுகாப்பற்ற உலகில் செழுமைப்படுத்துவதற்கான ஒரு உத்தி மாத்திரமல்ல, பூஜ்ஜிய கரியமில உலகில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சி நிரலாகவும் மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் காலநிலை பாதிப்புக்குள்ளானோர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிதி வெளி தொடர்ந்து அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகப் பொருளாதார நிலை மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக அந்த நாடுகளுக்கு நிதி வசதிகளை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, காலநிலை செழிப்புத் திட்டத்தில் பங்குபற்றுவதன் மூலம் நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி, மேம்பட்ட பொருளாதாரங்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச நிதிச் சமூகத்திற்கு மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

Exit mobile version