Site icon Tamil News

அரச வங்கிகளின் 20 வீத பங்குகளை விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் திட்டம்!

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளின் 20% பங்குகளை விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளில் 20% பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் அது தேசிய குற்றமாகும் எனவும் இதன் மூலம் வங்கிகள் முழுமையாக விற்பனை செய்யப்படலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறான முறையில் வங்கிப் பங்குகளை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, ​​இரண்டு முக்கிய அரச வங்கிகள் இலாபம் ஈட்டி, கருவூலத்திற்கு வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அந்த அறிவிப்பு மேலும் கூறுகிறது.

Exit mobile version