Site icon Tamil News

இலங்கை: முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரியப் பணியில் சுமார் 34,000 பேர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version