Site icon Tamil News

இலங்கை தேசிய கீத சர்ச்சை – பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பாடகி

நாட்டு மக்களிடம் பாடகி உமாரா சிங்கவங்ச பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமைக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த ஆரம்ப நிகழ்வின் போது, நாட்டின் தேசிய கீதம் உமார சிங்கவங்சவின் ஊடாக ஒபேரா முறையில் இசைக்கப்பட்டமையினால் அது பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

எனவே, இது தொடர்பில், பொது நிர்வாக அமைச்சின் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவரால் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் மற்றும் அதற்காக அவர் பயிற்சி பெற்றமை குறித்தும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டில் நேற்று ஆராயப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சர்ச்சைக்குள்ளான பாடகி உமார வீரவங்ச குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒரு போதும் நாட்டின் கீர்த்திக்கும், தேசிய கீதத்தின் பெருமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த விரும்பியதில்லை என தெரிவித்துள்ளார்.

Exit mobile version