Site icon Tamil News

இலங்கை அணி 455 ஓட்டங்களால் முன்னிலை

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நிஷான் மதுஷ்கா 34 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்ன 04 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 02 ஓட்டங்களையும் மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் தனஞ்சய சில்வா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்ததுடன், 09 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கமிது மெண்டிஸும் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில்  தடுமாறினாலும், 455 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 531 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Exit mobile version