Site icon Tamil News

ஈரானுடன் பண்டமாற்று வர்த்தகம் செய்யும் இலங்கை

ஈரானில் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிபொருளுக்கான கட்டணத்தை தேயிலை பொருட்களை கொடுத்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது 2021ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு ஈரானிடம் இருந்து பெறப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான தேயிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறை பண்டமாற்று வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தேயிலைக்காக, இலங்கையில் உள்ள தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு, கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபாயில் பணம் செலுத்த உள்ளது.

ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு ரியால்களில் இது தொடர்பான கொடுப்பனவுகளைச் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version