Site icon Tamil News

50 ஆண்டுகளில் முதல் முறையாக நிலவில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம்!

ஒடிஸியஸ் லேண்டர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவில் வியாழன் அன்று தரையிறங்கிய முதல் அமெரிக்க விண்கலம் ஆனது.

இந்த லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் நிலவில் தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines பெறும்.

ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் நேற்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

விரைவில் ஒடிஸியஸ் நிலவின் மேற்பரப்பை எட்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கும் திட்டத்துடன் நிலவை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தகது.

ஆறு கால்கள் கொண்ட ஒடிஸியஸ் லேண்டர் நோவா-சி வகையைச் சேர்ந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 57 மைல் (92 கிமீ) தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நுழைந்திருக்கிறது என இன்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசா அனுப்பிய ஓடிசிஸ் லேண்டர் விண்கலம், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மலாபெர்ட் ஏ பள்ளத்தாக்கில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version