Site icon Tamil News

Facebook – Instagram குறுந்தகவல் தொடர்பில் புதிய நடைமுறை!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் மெசேஜ் அனுப்பும் சேவையை நிறுத்திக் கொள்வதாக மெட்டா நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலே உங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு என்னவென்று சொல்லுங்கள் எனக் கேட்கிறார்கள். அதேபோல இந்த சமூக வலைதளங்களில் நமது நேரத்தை கழிப்பதற்கான பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதால், பலரும் இத்தகைய தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

இந்த தளங்களில் இருக்கும் பல சிறப்பான அம்சங்களில், பிறருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அம்சம் அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்சத்தைதான் தற்போது மெட்டா நிறுவனம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இடையே மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக இன்ஸ்டாகிராமில் இருந்து பேஸ்புக்க்கும், பேஸ்புக்கில் இருந்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் மெசேஜ் அனுப்பலாம்.

ஆனால் இதை யாரும் அதிகம் பயன்படுத்தாததால், இந்த அம்சம் வரும் டிசம்பர் மதத்துடன் நிறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இந்த அம்சத்தைப் பயன்படுத்தி இனி யாரும் குறுஞ்செய்தியோ, வீடியோ காலோ செய்ய முடியாது. ஆனால் ஏற்கனவே உரையாடிய விஷயங்களை மட்டும் பார்க்கலாம். மெட்டா நிறுவனம் தன் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளது.

அதே நேரம் பேஸ்புக் மெசஞ்சரில் End to End Encryption கொண்டு வரப்போவதால், இந்த மெசேஜ் அனுப்பும் அம்சத்தால் எந்த பயனும் இல்லை. இந்த காரணத்திற்காகவும் இதை மெட்டா நிறுவனம் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த முடிவால் இதுவரை மெசேஜ் சேவையை பயன்படுத்திய சில பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 

Exit mobile version