Site icon Tamil News

தென் கொரியாவில் பொதுத் தேர்தல் ஆரம்பம்!

தென் கொரியாவில் பொதுத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.  ஜனாதிபதி யூன் சுக் யோல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன.

ஆனால், நாட்டின் நாடாளுமன்ற அதிகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டிருப்பதால், ஜனாதிபதியின் கட்சியான People Power  கட்சி தனது வேலைத்திட்டத்தில் வெற்றி பெறுவது கடினம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த தேர்தல் முடிவு எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சாதகமாக அமையும் என்று கருத முடியாது என தேர்தல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது தென் கொரியா 3 முக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. வேகமாக உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலை, அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகை மற்றும் மருத்துவ வேலை நிறுத்தம் ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக ஜனாதிபதியின் செல்வாக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version