Site icon Tamil News

தைவான் வான் பரபரப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சீன போர் விமானங்கள்

தைவான் வான் பரபரப்பில் சீன இராணுவத்திற்கு சொந்தமான 10 போர் விமானங்கள நுழைந்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன இராணுவத்திற்கு சொந்தமான விமானங்கள் தங்கள் வான் பரப்பிற்குள் அத்துமீறி ஊடுருவியதாக தைவான் தெரிவித்துள்ளது.

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா உரிமை கோரிவருகிறது.

இந்நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை (Kevin McCarthy) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அந்த சந்திப்பு நிகழ்ந்தால், தைவான் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சீன ராணுவத்திற்கு சொந்தமான 9 போர் விமானங்களும், ஒரு டிரோன் விமானமும் தங்கள் வான் பரப்பிற்குள் ஊடுருவி போர் ஒத்திகை மேற்கொண்டதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.

Exit mobile version