Site icon Tamil News

தென்சீனக் கடல் விவகாரம்: மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சீனா, பிலிப்பீன்ஸ்

சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான தென்சீனக் கடல் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது.

நடுக்கடலில் தனது கப்பல்கள் மீது வேண்டுமென்றே மோதுவதாகவும் சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் கப்பல்களை அபாயகரமான முறையில் செலுத்துவதாகவும் இருநாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றன.

தென்சீனக் கடல் விவகாரம் குறித்து நிலவும் பதற்றநிலையைக் குறைத்து அதுதொடர்பான கருத்து வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பிலிப்பீன்சும் இணக்கம் தெரிவித்திருந்தன.ஆனால் தற்போது குறைகூறல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன.

சீனக் கடற்பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பிலீப்பீன்சைச் சேர்ந்த கப்பல் அத்துமீறி நுழைந்து சீனாவுக்குச் சொந்தமான கப்பல் மீது மோதியதாக சீனக் கடலோரக் காவல் படை ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று தெரிவித்தது.இதைப் பிலிப்பீன்ஸ் மறுத்தது.

தனக்குச் சொந்தமான கடற்பகுதிக்குள் சீனக் கப்பல்கள் இருந்ததாகவும் அவை பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படையின் கப்பல்களை மூர்க்கத்தனமாக எதிர்கொண்டதாகவும் பிலிப்பீன்ஸ் குற்றம் சாட்டியது.

தென்சீனக் கடலில் உள்ள இரண்டு தீவுகளில் பிலிப்பீன்ஸ் கடற்படை வீரர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அனுப்பிவைக்க பிலிப்பீன்சைச் சேர்ந்த கப்பல் சென்றுகொண்டிருந்தபோது சீனக் கப்பல்கள் அதை வழிமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version