Site icon Tamil News

ஜப்பானில் மீண்டும் தலையெடுக்கும் கரடிகள் அட்டகாசம்!

ஜப்பானியத் தீவான ஹொக்கைடோவில் 7 அடி 3 அங்குல உயரத்தில் நின்றிருந்த ஒரு பெரிய கரடி,  உள்ளூர்வாசிகள் பண்ணைகளில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிஞ்ஜாக கரடிகள் என அழைக்கப்படும் குறித்த கரடிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து மக்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்திருந்தனர்.

ஆனால் தற்போது கரடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு, அண்டை தீவான ஹொன்ஷுவில் உள்ள குன்மா மாகாணத்தில், வயதான தம்பதியரின் வீட்டில் கரடிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக  கூறப்படுகிறது.

அதே தீவில், மே மாதத்தின் நடுப்பகுதியில், அகிடா மாகாணத்தில், மூங்கில் தளிர்களைத் தேடும் போது 64 வயதான ஒருவர் கரடியால் கொல்லப்பட்டுள்ளார்.

ஜப்பானில் 2006 ஆம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரையான காலப்பகுதிகளில் ஏறக்குறைய 200 பேர் கரடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version