Tamil News

உலகம் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள் !

“கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு” என்று சொல்வார்கள் அதற்கு ஏற்ப நாம் இந்த உகலகத்தில் அறிந்து வைத்திருக்கின்ற சில விடயங்கள் உள்ளங்கை அளவுதான் இருக்கும். நாம் அறியாத எத்தனையோ விடயங்கள் இந்த உலகில் கொட்டிக்கிடக்கின்றது.

அவ்வாறான சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உலகின் பழமையான மர சக்கரம்

Worlds Oldest Wagon Wheel Facts

உலகின் மிகப் பழமையான மரச்சக்கரம் கடந்த 2002 ஆம் ஆண்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது.   ஸ்லோவேனியாவின் தலைநகரான லுப்லஜானாவிற்கு தெற்கே தோராயமாக 12 மைல் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த சக்கரம், தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த சக்கரம் 5,100 முதல் 5,350 ஆண்டுகள் பழமையானதாகும்.

நம் வீட்டில் அதிகமாக தூசி படிவதற்கு நமது செல்கள் தான் காரணம்

லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனிதர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 200 மில்லியன் தோல் செல்களை வெளியேற்றுகிறார்கள். இதுதான் வீடுகளில் அதிக தூசி படிய காரணமாம். அதாவது இறந்த செல்கள்தான் தூசியை கொண்டுவருகிறது.  அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் அறிக்கையானது ஸ்குவாலீன் எனப்படும் தோல் எண்ணெய் இயற்கையாகவே உட்புற ஓசோன் அளவை 15 சதவிகிதம் குறைக்க உதவுகிறது என்பதை கூறியுள்ளது.

சூடானில் தான் அதிக பிரமிட்டுக்கள் இருக்கிறதாம் 

பிரமிட்டுக்கள் அதிகம் உள்ள இடம் என்றால் அது எகிப்துதான் என்று சொல்வோம். ஆனால் எகிப்தை விட சூடானில்  தான் அதிக பிரமிட்டுக்கள் இருக்கிறதாம். அறிக்கையின்படி,  எகிப்தில் 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சூடானில் 255 பிரமிடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

மனித உடலில் இரத்தநாளங்களே இல்லாத பகுதி எது தெரியுமா?

மனித உடலில் கார்னியா பகுதியில் இரத்தநாளங்கள் இல்லை.  கார்னியா என்பது கண்ணின் தெளிவான பகுதியாகும், இது கண்மணி மற்றும் கண்ணின் பிற பகுதிகளை உள்ளடக்கியது.  மனித உடலில் இரத்த நாளங்களைக் கொண்டிருக்காத ஒரே வகை திசு கார்னியாதான்.   ஹார்வர்ட் கண் மருத்துவத் துறையின் ஸ்கெபன்ஸ் கண் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி. உங்கள் கண்ணில் நீங்கள் அறிந்திராத வேறு சில வினோதமான அம்சங்களும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் அனிமேஷன் திரைப்படம் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்டது.

இன்று டிஸ்னி உலகின் முதல் அனிமேஷன் திரைப்படம் ஆர்ஜென்டினாவில் தான் தயாரிக்கப்பட்டது.  20 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ஜென்டினாவில் முழு நீள அனிமேஷன் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இது 58,000 வரைபடங்களால் உருவாக்கப்பட்ட எல் அப்போஸ்டோல் எனப்படும் அரசியல் நையாண்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது

பிலிப்பைன்ஸ் ஒரு தீவு கூட்டத்தால் உருவானது என்பதை அறிந்திருந்தாலும், அங்கு எத்தனை தீவுகள் இருக்கின்றன என்பது அறியாத ஒரு விடயம்தான். அறிக்கையின்படி, 7,641 தீவுகளால் நிறைந்ததுதான் பிலிப்பைன்ஸ்.

 

 

 

 

 

Exit mobile version