Site icon Tamil News

திருமணமான பெண்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்வதற்கான காரணம்!

திருமண வாழ்க்கையை நடத்த நமது முன்னோர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். அதை இப்போது வரை நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

ஒரு பெண் திருமணமாகி முதல் முறை கணவரின் வீட்டிற்குள் செல்லும்போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்லுவார்கள். அதற்கு சரியான காரணம் பலருக்கும் தெரியாது.

பெண்களின் கால்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அழகாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் முறை திருமண பெண் புகுந்த வீட்டிற்கு தலைவாசல் பணியில் நெல்லை வைத்து அதில் மகாலட்சுமி ஆன தனது வலது காலினால் உள்ளே தானியத்தை தள்ளி வரும் பழக்கம் இருக்கிறது.

இதன் மூலம் மகாலட்சுமி வீட்டிற்கு தானியத்தை கொண்டு வருகிறாள் என்று அர்த்தமாம். எதற்காக தான் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து வர சொல்கிறார்கள்.

நம் கால் பாதம் யார் மீதாவது பட்டு விட்டால் அவர்களை தொட்டு வணங்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி நம் பாதம் மற்றவர் மீது படும்போது அந்த மகாலட்சுமி அவரிடம் சென்று விட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே தான் அவரை தொட்டு வணங்கி மகாலட்சுமியை மீட்டு எடுப்பதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version