Site icon Tamil News

20 வயதை எட்டும் Facebook சமூக ஊடகத் தளம்

Facebook எனும் சமூக ஊடகத் தளம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகப்போகின்றன.

2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் திகதி அன்று மார்க் ஸக்கர்பர்க்கும் (Mark Zuckerberg) அவரின் 3 நண்பர்களும் அதைத் தொடங்கிவைத்தனர்.

முதலில் ஹார்வர்ட் (Harvard) கல்லூரி மாணவர்கள் மட்டும் அத்தளத்தை உபயோகித்தனர்.

அதன் பின் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மற்ற மாணவர்கள் தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டில் அனைவரும் Facebook தளத்தைப் பயன்படுத்த வழியமைக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் Facebook ஓர் அங்கமாக உள்ள நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றப்பட்டது.

சென்ற ஆண்டு (2023) மாதத்திற்கு 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அத்தளத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இணையத்தில் மக்கள் நடந்துகொள்ளும் விதம், இசை, அரசியல் ஆகியவற்றின்மீது Facebook கொண்ட தாக்கம் அதிகம் என்று Insider Intelligence நிறுவனத்தின் ஆய்வாளர் ஜாஸ்மின் என்பர்க் (Jasmine Enberg) கூறினார்.

“Viral” அதாவது தகவல்கள், காணொளிகள், படங்கள் வேகமாகப் பகிரப்படும் போக்கை அறிமுகம் செய்த பெருமையும் Facebook-ஐச் சேரும்.

இணையத்தில் மட்டும் இயங்கும் செய்தித்தளங்கள் அதிகரிப்பதற்குக் காரணமும் Facebook தான்.

தற்போது அத்தளம் விளம்பர நிறுவனமாகவும் இயங்குகிறது.

Facebook தளத்தைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை, தளத்தின் செயல்திறன் ஆகிய காரணங்களால் விளம்பரதாரர்கள் அதில் விளம்பரம் செய்வதை விரும்புவதாகவும் என்பர்க் கூறினார்.

Exit mobile version