Site icon Tamil News

ஜெர்மனியில் குறைக்கப்படும் சமூக உதவி பணம் – ஏமாற்றத்தில் மக்கள்

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் சில குறைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியின் பங்காளி கட்சியான FDP கட்சியுடைய அரசியல் பிரமுகரான கிறிஸ்டியான் டியோன் முன்வைத்துள்ளார்.

அதற்கமைய, சமூக உதவி பணத்தை குறைப்பதற்கு பெருமளவானோர் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

முக்கிய அரசியல் பிரமுகரான கிறிஸ்டியான் டியோனின் கோரிக்கைக்கமைய, ஜெர்மனியின் தற்போதைய தொழில் அமைச்சரான வுபேட்டஸ் ஹையில் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

தற்போதைய சட்டத்தில் இவ்வகையான “சமூக உதவி பணத்தை குறைப்பதற்கு எவ்வகையான இடமும் இல்லை” என்ற கருத்தை அழுத்தமாக தெரிவித்து இருந்தார்.

ஜெர்மனியின் நீதி அமைச்சர்மாக்கோ புஷ்மன் அவர்கள் தற்போதைய சட்டத்தில் இவ்வாறு சமூக உதவி பணத்தை குறைப்பதற்கு சட்டத்தில் இடம் அல்லை என்றும், இந்நிலையில் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்தால் வழங்கப்படுகின்ற சமூக உதவி பணத்தில் 14 யுரோக்களில் இருந்து 20 யுரோக்களை குறைக்க முடியும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனியில் கருத்து கணிப்புக்ளை மேற்கொள்ளும் அமைப்பான சி வே என்று சொல்லப்படும் அமைப்பானது ஜெர்மனியில் உள்ள மக்களிடம் இருந்து சமூக உதவி பணத்தில் குறைப்பு ஏற்படுத்தப்படுவது தொடர்பான மக்களின் கருத்து என்பதை பற்றி கருத்து கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜெர்மனியில் 58 சதவீதமான மக்கள் ஜெர்மன் அரசாங்கமானது FDP கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகர் கிறிஸ்டியான் லின் தெரிவித்துள்ளது போன்று, சமூக உதவி பணத்தில் குறைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பிரதிபலித்துள்ளார்.

43 சதவீதமான ஜெர்மனியர்கள் அரசியல் பிரமுகர் கருத்துக்கு எதிர்ப்பை தெரிவித்ததாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 சதவீதமான மக்கள் தாம் எவ்விதமான கருத்தையும் இந்த விடயம் தொடர்பில் கூற வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version