Tamil News

ஸ்மார்ட் சிட்டி பணிகள் கருத்தரங்கம்: திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு

கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என பல்வேறு நகரங்களிலிருந்து துணை கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவை வந்தனர்.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 7 குளங்களில் நடைபெற்ற வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரிய குளத்தில் அந்தரத்தில் சைக்கிள் பயணம், விளையாட்டு பூங்காக்கள், 3 டி திரையரங்கம் மற்றும் லைட்டிங் ஷோ உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து உக்கடம் பெரியகுளம், ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் மற்றும் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டமைப்பு என ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்டு திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அக்குழுவினர் அறிந்து கொண்டனர்.

Exit mobile version