Tamil News

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கன்ஃபார்ம்.. லீக்கானது டைட்டில் கார்டு

விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டின் அணிவகுப்பே இருக்கும் என தெரிகிறது. மறைந்த விஜயகாந்த் முதல் அடுத்த தளபதி இவர் தான் என ரசிகர்கள் சொல்லும் இடத்துக்கு தன்னை வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன் வரை கேமியோவாக வர காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் லிஸ்ட்டே பெரிதாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், கேமியோக்களையும் வெங்கட் பிரபு சரியாக கையாண்டு இருப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ள சிவகார்த்திகேயனை கோட் படத்திலேயே கேமியோ ரோலில் நடிக்க வைத்து விட்டார் வெங்கட் பிரபு என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியானாலும், அதில், எந்தளவுக்கு உண்மை உள்ளது என்கிற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கான தேங்க்ஸ் கார்டு கோட் படத்தில் இருந்து லீக் ஆகியிருப்பதாக சோஷியல் மீடியாவில் அந்த டைட்டில் கார்டின் ஸ்க்ரீன் ஷாட் தீயாக பரவி வருகிறது.

Exit mobile version