Site icon Tamil News

உலகின் சிறந்த விமான நிறுவனமாக தெரிவாகிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

உலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்து இருந்தது, அதை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான Skytrax World Airlines விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஜூன் 20 அன்று பாரிஸில் நடைபெற்றது.

அங்கு முதல் விருதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது, “விமான வளர்ச்சிக்காக அயராது உழைத்து பல தியாகங்களைச் செய்தவர்களுக்கு இந்த விருது சான்றாகும்” என்று கூறினார்.

அதனால் தொற்றுநோயிலிருந்து வலுவாக மீட்சியடைந்து தற்போது முன்னணி சர்வதேச விமான நிறுவனம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Skytrax விருதுகள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் இந்த ஆண்டு மே மாதத்துக்கும் இடையில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளிடம் நடந்தது.

அதில் பயணிகள் சுமார் 325 க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்தனர்.

அந்த கணக்கெடுப்பு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு SIA முதலிடத்தை பிடித்தது.

அதே போல குறைந்த கட்டண விமான நிறுவனமான Scoot, “நீண்ட தூரம் செல்லும் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம்” மற்றும் உலகின் சிறந்த Low-cost விமான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

Exit mobile version