Tamil News

இந்த உலகத்தில் உண்மையை பேசுறவனுக்குத்தான் கஷ்டம் – சிம்பு மாஸ்

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் கமல் ஹாசன், ஷங்கர், அனிருத், அதிதி ஷங்கர், நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கு சிம்பு தாமதமாக வந்தார். இருந்தாலும் அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகியிருக்கிறது.

முதலில் ரஜினியை மனதில் வைத்துதான் இந்தியன் படத்தின் ஹீரோ தனது நெற்றியில் விழும் முடியை ஒதுக்கும் மேனரிசத்தை யோசித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகு கமல் ஹாசன் உள்ளே வந்தார்.

படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கும் சூழலில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய சிம்பு,

“விழாவுக்கு தாமதமாக வந்தேன் என்று நினைக்காதீர்கள். இருந்தாலும் நான் லேட்டாக வந்தேன் என்றுதான் சொல்வார்கள். கமல் சாரின் தக் லைஃப் படத்தின் ஷூட்ட்லிருந்துதான் வருகிறேன். இந்தியன் எனக்கு நெருக்கமான படம்

கமர்ஷியல் படங்களுக்கு என்று ஒரு வடிவத்தை செட் பண்ணியதே இந்தியன் படம்தான். கமல் ஹாசன் எனக்கு ஆன் ஸ்க்ரீன் குரு. கமலுடன் நடித்த அனுபவத்தை தக் லைஃப் மேடையில் பேசுவேன். அவருடன் நடிக்கும்போது மட்டும் எனக்குள் ஒன்றுமே தோன்றவில்லை. அவரை பார்த்துக்கொண்டிருக்க மட்டும்தான் தோன்றும். கமல் ஹாசன் உண்மையான பான் இந்தியா ஸ்டார். ஒரே நேரத்தில் இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர் என மூன்று படங்களை எடுக்க ஷங்கரால்தான் முடியும். அது சாதாரண விஷயம் இல்லை. அவர் நிஜமாகவே கிரேட்.

இந்தப் படத்தில் அனிருத் நன்றாக இசையமைத்திருப்பார் என்று நம்புகிறேன். நான் ஏதோ ட்ராஸ்பார்ம் ஆனேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அது ஒரு ஸ்பிரிச்சுவல் விஷயம். நம்முடன் இருக்கும் எல்லோரும் நம்மை விட்டுவிட்டு போய்விடுவார்கள். நமது உடல் மட்டும்தான் நம்முடன் இருக்கும். அதனால் நாம் அதனை ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்திலேயெ உண்மையை பேசுறவனுக்குத்தான் கஷ்டம்” என்றார்

Exit mobile version